தளபதியின் 'மெர்சல்' அட்டகாசமான போஸ்டருடன் சிங்கிள் பாடல் வெளியீடும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சில வினாடிகளுக்கு முன் புதிய அட்டகாசமான போஸ்டருடன் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி 'மெர்சல் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக புதியதாக வெளியாகியுள்ள போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரில் சிங்கிள் பாடலின் முதல் வரி 'ஆளப்போறான் தமிழன்' என்று இருப்பது தற்போதைய தமிழக அரசியல் நிலைக்கு பொருத்தமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டை ஒரு தமிழனே ஆள வேண்டும் என்று பல தலைவர்கள் வற்புறுத்தி வரும் நிலையில் விஜய் படத்தின் பாடலின் வரியாக 'ஆளப்போறான் தமிழன்'' என்று இருப்பது பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.

மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள இந்த புதிய போஸ்டரில் விஜய் ஆக்ரோஷத்துடன் கையை உயர்த்தி கொண்டிருப்பது போன்றும் அவரை சுற்றி ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருப்பதும் போன்றும் காணப்படுகிறது.

More News

மாணவியை அனுப்ப மறுத்த தலைமை ஆசிரியைக்கு கத்திக்குத்து

பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள ஒரு பள்ளியில் உறவினர் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்த பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை காம்பஸ் கருவியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

இன்று விஜய் ரசிகர்களுக்கு கிடைக்கும் இரட்டை விருந்து

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அறிவித்திருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்.

அஜித் தோன்றும் ஒவ்வொரு பிரேமும் இடிபோல் இருக்கும்: எடிட்டர் ரூபன்

அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் 'பாகுபலி 2' படத்திற்கு பின்னர் வெளியாகும் பிரமாண்டமான படம் என்பதால் இந்த படத்திற்கு உலகளாவிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அறிமுக பாடலில் இளம் நடன இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வெகுவிரைவில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ரஜினியின் 'கபாலி'யுடன் கனெக்சன் ஆன தனுஷின் 'விஐபி 2

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது....