விஜய்யின் 'மெர்சல்' படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பம்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் முதல் பாதியின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மேஜிக்மேன் என மூன்று வித்தியாசமான வேடங்களில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு 50%க்கும் மேல் முடிந்துவிட்டதால்,இந்த படத்தின் முதல் பாதியின் டப்பிங் பணிகள் இன்று ஒரு சிறு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் முரளிராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'மெர்சல்' படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

More News

ஜூலை 14-ல் குவியும் புதிய படங்கள் ரிலீஸ்

கடந்த திங்கள் முதல் வியாழன் வரை திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தியதால் நேற்றைய வெள்ளியன்று புதிய படங்கள் வெளியாகவில்லை.

சென்னையில் மோனோ ரயில் இயக்க தமிழக அரசு திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ ரயில் வசதியில்லாத இடங்களில் மோனோ ரயில் தடம் செயல்படும் என தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.

இந்திய அரசின் அனுமதியை பெற்றது சிவகார்த்திகேயன் பட நிறுவனம்

புரமோஷன் கன்சல்டண்ட் என்ற பணியில் கோலிவுட் திரையுலகில் பல படங்களில் பணியாற்றிய ஆர்.டி.ராஜா, கடந்த ஆண்டு '24ஏஎம் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 'ரெமோ' என்ற படத்தை தயாரித்தார்.

ரஜினி பிறந்த நாளை இன்று மாலை கொண்டாடும் சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12ஆம் தேதியை ஒரு முக்கிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் எழுதிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: