விஜய் 61: நிறைவடையும் நிலையில் விஜய்-நித்யாமேனன் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Monday,February 27 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய்-நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். அட்லி இயக்கி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

More News

கவுதம் கார்த்திக்கின் 'முத்துராமலிங்கம்' ஓப்பனிங் எப்படி?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ஐஸ்வர்யாதனுஷின் 'வை ராஜா வை' உள்பட ஒருசில படங்களில் நடித்த கவுதம் கார்த்திக் நடித்த 'முத்துராமலிங்கம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்...

விஜய் ஆண்டனியின் 'எமன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

'பிச்சைக்காரன்', 'சைத்தான்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து கடந்த வெள்ளியன்று வெளியான விஜய் ஆண்டனியின் 'எமன்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது...

மூன்றாவது வாரமாக தொடர்ந்து கர்ஜிக்கும் சூர்யாவின் 'சிங்கம் 3'

'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகிய வெற்றி படங்களின் கூட்டணியான சூர்யா-ஹரி மீண்டும் இணைந்த படமான சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி 3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது...

விஜய்-சீமானின் 'பகலவன்' படத்தின் லேட்டஸ்ட் செய்தி

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்கத்தில் 'பகலவன்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக ஒருசில வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டது...

விஜய்-சீமானின் 'பகலவன்' படத்தின் லேட்டஸ்ட் செய்தி

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்கத்தில் 'பகலவன்' என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாக ஒருசில வருடங்களுக்கு முன்னர் கூறப்பட்டது...