close
Choose your channels

'தளபதி 63' படத்தின் பூஜை தேதி குறித்த தகவல்

Saturday, January 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில மாதங்களாக இயக்குனர் அட்லி செய்து வந்தார்.

இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, யோகிபாபு, கதிர், விவேக் உள்பட பலர் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி 'தளபதி 63' படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளதாகவும், இந்த பூஜையில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவிருப்பதாகவும், நாளை மறுநாள் அதாவது ஜனவரி 21 முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படம் இவ்வருட தீபாவளி தினத்தில் வெளீயிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.