close
Choose your channels

போலீஸ் தடியடி எதிரொலி: 'தளபதி 63' படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு வடசென்னையில் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் படப்பிடிப்பு இந்த பகுதியில் நடைபெற்று வருவதை அறிந்த காசிமேடு, தண்டையார் பேட்டை பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் குவிந்து விடுகின்றனர். படக்குழுவின் செக்யூரிட்டி பிரிவால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வேறு வழியின்றி போலீசார் அழைக்கப்பட்டு லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

தனது ரசிகர்கள் மீது தடியடி என்பதை கேள்விப்பட்ட விஜய், படப்பிடிப்பு இடத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய், நயன்தாரா, பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.