பிரபல கோலிவுட் இசையமைப்பாளர் பாலிவுட்டில் அறிமுகம்

  • IndiaGlitz, [Tuesday,May 16 2017]

கோலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எஸ்.தமன். தில்லாலங்கடி, காஞ்சனா, மெளனகுரு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, சேட்டை, வாலு, சமீபத்தில் வெளியான 'சிவலிங்கா' உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும், ஏராளமான தெலுங்கு படங்களூக்கும் இவர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் இசையமைப்பாளர் எஸ்.தமன் தற்போது காலடி எடுத்து வைக்கின்றார். அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகவுள்ள 'கோல்மால் 4' படத்தின் மூலம் எஸ்.தமன் இந்தி திரையுலகில் நுழைகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகை போலவே இந்தி திரையுலகிலும் அவர் பல சாதனைகள் நிகழ்த்த நமது வாழ்த்துக்கள்.

More News

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு

கடந்த சில மாதங்களாகவே அரசியல் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர்களின் சோதனை உள்பட பல சோதனைகள் அவ்வப்போது நடந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்...

ரஜினிகாந்த் தோல்வி அடைவார்: சுப்பிரமணியன் சுவாமியின் கடுமையான விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது, 'கடவுள் இப்போது என்னை நடிகனாக பயன்படுத்தி வருகிறார். நாளை அவர் என்னை அரசியல்வாதியாக பயன்படுத்தினால் உண்மையாக செயல்படுவேன்' என்று தெரிவித்திருந்தார். இந்த பேச்சு அவர் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த

முத்தரப்பு பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு. பஸ் ஸ்டிரைக் தொடருமா?

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஜூன் முதல் சமந்தாவுடன் மேஜிக் செய்யும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது என் கனவு: அட்லி குறிப்பிடுவது யாரை?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி, பின்னர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். முதல் படம் கொடுத்த வெற்றியால் அவருக்கு இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது