close
Choose your channels

'வேற லெவலில் பாடல்கள்”: 'தளபதி 66' இசை குறித்து தமன்!

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியில் இசையமைப்பாளர் தமன் ஈடுபட்டு வருகிறார் .

கடந்த நான்கு ஆண்டுகளில் ஐந்து தமிழ் படத்திற்கு மட்டுமே தமன் இசை அமைத்து இருந்தாலும் அவர் தெலுங்கில் இசையமைத்த அனைத்து படங்களின்பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்திற்காக ஒரு சில பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் இன்னும் சில பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘தளபதி 66’ பாடல்கள் குறித்து அவர் ரசிகர்களிடம் பகிர்ந்த போது ’இதுவரை தான் இசையமைத்த பாடல்களிலேயே வேற லெவலில் இருக்கும் பாடல்களாக இந்த படத்தில் இருக்கும் என்றும், கண்டிப்பாக ரசிகர்களை முழு திருப்தி படுத்தும் அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ’தளபதி 66’ திரைப்படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப கதை என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தில்ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.