ராஜூவை குறைகூறிய தாமரை: ஜால்ரா அடித்த ஜூலி!

  • IndiaGlitz, [Wednesday,February 16 2022]

ராஜுவை குறைகூறி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை பேசியபோது ஜூலியும் ஜால்ரா அடித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரையும் ராஜூவும் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும் தாமரைக்கு பல நேரங்களில் ராஜு அறிவுரைகள் கூறி உள்ளார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராக தாமரை கலந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் ராஜூ மீது நிரூப் மற்றும் ஜூலியிடம் குறை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது .

அந்த வீடியோவில் தாமரை, ‘என் மூத்த மகன் போல ராஜூவை நான் நினைத்திருந்தேன். அவனும் அந்த அளவுக்கு என்னிடம் பாசமாக இருந்தான்.  ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே போன பிறகு எல்லாமே மாறிப் போய்விட்டது.   இதுவரை ராஜூ என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்றும் அந்த அவ்வளவு பாசமாக இருந்தவர்கள் வெளியே வந்தவுடன் ஏன் இப்படி மாறிவிட்டார்கள் என்று நான் பல நாட்கள் தூங்காமல் இருந்தேன் என்றும் என்னுடைய நிலையை பார்த்து என்னுடைய கணவர் பயந்து விட்டார் என்றும் தாமரை கூறியிருந்தார்.

தாமரையின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜால்ரா அடிப்பது போல், ‘நானும் இதே போல் தான் முதல் சீசனில் இருந்து வெளியே போனவுடன் அனுபவித்தேன் என்று ஜூலி கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சிவகார்த்திகேயனுடன் தன்னுடைய போனில் தான் தாமரையை ராஜூ பேச வைத்தார் என்பது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மூலம் உறுதியானது என்றும் ராஜூவுக்கு தாமரையிடம் பாசம் இல்லாவிட்டால் எப்படி அவர் சிவகார்த்திகேயனுடன் பேச வைத்து இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

More News

காதலர் தினத்தில் அசால்ட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளும் மேகா ஆகாஷ்: வைரல் புகைப்படம்!

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' உள்பட பல படங்களில் நடித்த நடிகை மேகா ஆகாஷ். இவர் கையில் சிகரெட்டுடன் உள்ள புகைப்படத்தை

ஹிஜாப் போராட்ட மாணவி: வெகுமதியாக கிடைத்த ரூ.5 லட்சத்தை என்ன செய்தார் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்றபோது அவரை சுற்றி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இட்ட மாணவர்கள் மத்தியில் அல்லாஹு அக்பர் என கோஷமிட்ட

விமலை இதற்கு முன் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்: "விலங்கு" வெப்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விமல் முதல் முறையாக "விலங்கு" என்ற வெப்தொடரில் நடித்துள்ள நிலையில் இந்தத் தொடர் ஜீ5  தமிழ் ஓடிடியில் பிப்ரவரி 18 முதல் வெளியாகிறது.

'பவர் ஆஃப் அஜித்குமார்': 'வலிமை' வீடியோவை வெளியிட்ட போனிகபூர்

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை விறுவிறுப்பாக படக் குழுவினர் செய்து வருகின்றனர்

வெளிவராத படத்தின் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ வைரல்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை வெளிவராத படத்தின் பாடல் ஒன்றின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.