close
Choose your channels

நடிகர் விஜய்யை அதிமுக அரசால் எதிர்க்க முடியாது: தங்க தமிழ்செல்வன்

Thursday, November 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் மிகப்பெரிய வசூலை பெற்றாலும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளதால் இனிவரும் நாட்களில் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 'மெர்சல்' படத்தை தமிழக பாஜகவினர் ஹிட்டாக்கியது போன்று 'சர்கார்' படத்தை தமிழக அமைச்சர்கள் ஹிட்டாக்கிவிடுவார்கள் போல் தெரிகிறது என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த படம் குறித்து வெளியாகி வரும் பரபரப்பான கருத்துக்கள் குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் கூறியபோது, 'அதிமுக அரசால் மத்திய அரசையும் எதிர்க்க முடியாது, நடிகர் விஜயையும் எதிர்க்க முடியாது என்று கூறியுள்ளார். ஏற்கனவே தினகரன் சற்றுமுன் 'சர்கார்' படம் குறித்த தனது கருத்தை கூறியுள்ள நிலையில் தற்போது அவரது கட்சியின் முக்கிய பிரமுகரான தங்க தமிழ்செல்வனும் கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.