நடிகன்ய்யா... 'தங்கலான்' மேக்கிங் வீடியோ.. விக்ரம் பிறந்த நாளில் வேற லெவல்..!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டரை எடுத்துக் கொண்டால் அந்த கேரக்டருக்காக மெனக்கிடுவதில் விக்ரமை விட்டால் வேறு நடிகர் இல்லை என்று கூறப்படுவதுண்டு. அந்த வகையில் தனது உடலை வறுத்தி ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் ‘தங்கலான்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவர் எடுத்த ரிஸ்க், கஷ்டப்படும் நிலை, மேக்கப்பிற்காக மட்டும் பல மணி நேரம் எடுத்துக் கொண்டது உள்ளிட்ட பல காட்சிகள் இருப்பதை எடுத்து அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நடிகன்ய்யா என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

இன்று விக்ரம் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு செய்யும் மரியாதையாக தங்களால் பட குழுவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. மொத்தத்தில் விக்ரமுக்கு தனது திரையுலக வாழ்வில் ஒரு மிகச்சிறந்த படமாக ‘தங்கலான்’ இருக்கும் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் இருந்து வெளியே வருகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.