மீண்டும் இணையும் 'தங்கலான்' கூட்டணி.. ஆனால் இந்த முறை வேற லெவல்..!

  • IndiaGlitz, [Thursday,February 29 2024]

‘தங்கலான்’ படத்தில் பணிபுரிந்த இரண்டு பிரபலங்கள் மீண்டும் இணைய உள்ளதாகவும் ஆனால் இந்த முறை வேற லெவலில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தங்கலான்’ படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பா ரஞ்சித் தயாரிப்பாளராகவும், இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பா ரஞ்சித் உதவியாளர் அகிரன் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இன்று முதல் கட்ட படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

ஜிவி பிரகாஷ் உடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், ஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. 'தளபதி 69' படத்தை இயக்கும் காமெடி நடிகர்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 69' திரைப்படத்தை இயக்கும் இயக்குனர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்த போதிலும் தற்போது திடீர் திருப்பமாக காமெடி நடிகர் ஒருவர்

அசோக் செல்வனின் 'ப்ளூ ஸ்டார்' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தி

90's Kids-களின் அன்பிற்குரிய செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன்: வெற்றிக்கு வழி காட்டிய மீனாட்சி அம்மன்!

செய்தி வாசிப்பாளர் ஸ்ரீதர் நாராயணன் தன்னுடைய சிறுவயது ஊக்கம், இளம் வயது அனுபவங்கள் மற்றும் வேலை கிடைத்த அனுபவங்கள் பற்றி விரிவாக பேசுகிறார்.

இது சோனியா அகர்வாலின் '7G'.. த்ரில்லரான டிரைலர் ரிலீஸ்..!

செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த '7ஜி ரெயின்போ காலனி' என்ற திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருவதாக

'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா? என்ன காரணம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாகவும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில்