close
Choose your channels

 'கருமேகங்கள் கலைகின்றன' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதே தேதியில் ரிலீஸாகும் சந்தானம் படம்..!

Sunday, August 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தின் சென்சார் சான்றிதழ் நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் தங்கர்பச்சான் தனது சமூக வலைத்தளத்தில் ’கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில் சந்தானம் நடித்த ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ’களவாடிய பொழுதுகள்’ என்ற படத்தை தங்கர் பச்சான் இயக்கிய இருந்த நிலையில் ஆறு வருடம் கழித்து வெளியாகும் தங்கர் பச்சான் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, மஹானா, சஞ்சீவி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பி.லெனின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.