'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்கில் விஜய் நாயகி?

  • IndiaGlitz, [Wednesday,October 21 2015]

சமீபத்தில் வெளிவந்த ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

சல்மான்கான் நடிப்பில் இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் ராம்சரண்தேஜா நடிப்பில் இந்த படம் தெலுங்கில் தயாரிக்கப்படவுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேந்திர ரெட்டி இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இந்த படத்தில் அரவிந்தசாமி நடித்த பவர்புல் கேரக்டரில் மாதவன் நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரான நயன்தாரா கேரக்டரில் நடித்த சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விஜய்யுடன் சமந்தா நடித்து வந்த 'விஜய் 59' மற்றும் சூர்யாவுடன் நடித்து வந்த '24' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், சமந்தா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தனுஷ் இடத்தை பிடித்த அமலாபால்?

தனுஷுடன் இணைந்து 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த நடிகை அமலாபால், திருமணத்திற்கு பின்னரும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் கோலிவுட்டில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்...

எமிஜாக்சனின் இரட்டை விருந்து

தனுஷுடன் எமிஜாக்சன் நடித்த 'தங்க மகன்' திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமிஜாக்சன் நடித்த மற்றொரு திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது....

இளையதளபதியுடன் இறுதிநாள். சமந்தா நெகிழ்ச்சி

சீயான் விக்ரமுடன் முதல்முறையாக இணைந்து நடிகை சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.....

'10 எண்றதுக்குள்ள' திரைவிமர்சனம் தமிழில் ஒரு ஹாலிவுட் படம்.

சீயான் விக்ரம், கோலிசோடா' இயக்குனர் விஜய்மில்டன், தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய மூவரும் இணைந்தபோதே '10 எண்றதுக்குள்ள' என்ற இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை.....

வெட்கி தலைகுனியுங்கள் நண்பர்களே. ராதிகா சரத்குமார்

நடிகர் சங்க தேர்தலுக்கு பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், எஸ்பிஐ சினிமாஸ் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறிய நிலையில்...