'தேங்க் யூ ஷங்கர் சார்': அதிதி ஷங்கரின் பிறந்தநாள் வாழ்த்து டுவிட்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் உள்பட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஷங்கரின் இரண்டாவது மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் தனது அப்பாவை ’சார்’ என அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்வில் கூறியிருப்பதாவது:

'என் வாழ்வில் சினிமாவை கொண்டு வந்த இந்த மனிதருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். பான் இந்திய திரைப்படங்களின் முன்னோடி நீங்கள் தான். திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும். ஒவ்வொரு நாளும் என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி ஷங்கர் சார்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால் எப்போதும் என்னுடன் இருப்பதற்கு நன்றி அப்பா, ஐ லவ் யு என்று தனது வாழ்த்துக்களை அதிதி ஷங்கர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கார்த்தியுடன் அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் ’மாவீரன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் அதிதிஷங்கர் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிதியிடம் தோல்வி அடைந்த கார்த்தி: வைரல் வீடியோ

கார்த்தி, அதிதிஷங்கர் நடித்த 'விருமன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் அவர்களது

54 வயதில் திருமணமா? பிரபல தமிழ் நடிகர் விளக்கம்!

 54 வயதான பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் என ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த செய்திக்கு அந்த நடிகர் விளக்கமளித்துள்ளார்.

'விக்ரம்' ரிலீஸ் ஆன அதே தேதி: மீண்டும் ரூ.500 கோடி மேஜிக் நடக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 500 கோடி வசூல்

ஒரே ஷெட்யூலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்? டிசம்பரில் இன்னொரு படம்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'தளபதி 67' முழுக்க முழுக்க லோகேஷ் படமா? கசிந்த முக்கிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.