'கபாலி' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம். எஸ்.தாணு அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,April 30 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படத்தின் டீசர் தொழிலாளர் தினமான நாளை வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்நிலையில் நாளை இந்த டீசர் வெளியாகும் நேரம் குறித்து தயாரிப்பாளர் தாணு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு தாணுவின் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது. எனவே நாளை காலை 11 மணி முதல் இணையதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்பது உறுதியாகியுள்ளது.
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாபிசிம்ஹா படத்திற்கு சென்சார் போட்ட முட்டுக்கட்டை

பாபிசிம்ஹா நடித்த 'கோ 2' வரும் மே 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'மெட்ரோ' படத்தின் ...

விஜய்யின் 'தெறி'யை பின்பற்றிய சூர்யாவின் '24'

சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே 6-ல் பிரமாண்டமாக உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றது...

'சபாஷ் நாயுடு' படத்தில் கமலின் இன்னொரு குடும்ப உறுப்பினர்

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தின் தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சிறப்பாக நடைபெற்றது...

தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகும் அரசியல் திரைப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியும், அதன் மூலம் கிடைத்த தேசிய விருதும் நடிகர் பாபிசிம்ஹாவை உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தியது...

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இலங்கை எம்.பி சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் 'கபாலி' படத்தின் டப்பிங்கை முடித்த நிலையில் தற்போது அவர் '2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகி வருகிறார்...