விஜய்யை விட உனக்குத்தான் அதிக ஸ்கிரிப்ட் அனுப்பியிருக்கேன். தாணு

  • IndiaGlitz, [Thursday,August 04 2016]

மலையாளத்தில் ஹிட்டான 'தட்டத்தின் மரியாதே' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தின் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நாயகன் வால்டர் பிலிப்ஸ், நாயகி இஷா தல்வார், இயக்குனர் மித்ரன் ஜவஹர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"திரையுலகில் அறிமுகமாக ஒரு நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். தாணு சார் எனக்காக நிறைய ஸ்கிரிப்ட் அனுப்பினார். விஜய்யை விட அதிகமாக உனக்குத்தான் ஸ்கிரிப்ட் அனுப்பியுள்ளேன், எதுவுமே பிடிக்கலையா? என்று கேட்ட தாணு சாரிடம் நான் பிடித்ததாக சொன்ன கதைதான் 'மீண்டும் ஒரு காதல் கதை.' உனக்கு பிடித்தால் தைரியமாக நடி, நானே இந்த படத்தை வெளியிடுகிறேன் என்று கூறிய தாணு அதன்படி வெளியிடுகிறார். அவருக்கு எனது நன்றிகள்' என்று இந்த படத்தின் நாயகன் வால்டர் பிலிப்ஸ் பேசினார்.
'தட்டத்தின் மரயத்து' படத்தில் நாயகியாக நடித்த இஷா தல்வார் தான் இந்த படத்திலும் நாயகி. அவர் இந்த பிரஸ்மீட்டில் பேசியபோது, "தட்டத்தின் மரியாதே' என்னோட முதல் படம். அந்த படத்துல நடிச்ச அதே பீலோட தான் இந்த படத்துலயும் நடித்தேன். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளேன். இதற்கு வால்டருக்கும், ஜவகருக்கும் நன்றி சொல்லணும் என்று கூறினார். இவர் ஏற்கனவே தமிழில் 'தில்லுமுல்லு' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் ஜவஹர் மித்ரன் பேசியபோது, 'மலையாள படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை. தமிழுக்காக பல மாற்றங்கள் செய்துள்ளோம். இந்த படத்திற்காக என்னுடன் உழைத்த உதவி இயக்குனர்கள், கேமிராமேன் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி' என்று கூறினார்.

More News

'குற்றப்பரம்பரை'யை பின்னுக்கு தள்ளிய பாரதிராஜா-பாலா

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'குற்றப்பரம்பரை' கதை கொண்ட படத்தை யார் இயக்குவது? என்று இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா...

ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் டீமில் அரவிந்தசாமி

மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் அறிமுகமாகிய நடிகர் அரவிந்தசாமி, அதன் பின்னர் ,ரோஜா', பம்பாய், 'இந்திரா'...

'ரெமோ' அனிருத்தின் பின்னணி இசை

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பில் ஒருசில பேட்ச் பணிகள் மட்டுமே பெண்டிங் இருந்த நிலையில்...

இது அஜித்தின் 'உலகம் சுற்றும் வாலிபன்'. சத்யஜோதி தியாகராஜன்

எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' உலகின் பல நாடுகளில் படமாக்கப்பட்டது போல அஜித்தின் 57வது...

'கபாலி'க்கு கிடைத்த ரூ.100 கோடி எக்ஸ்ட்ரா வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 22ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரூ.400 கோடி...