அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் வழக்கறிஞர்

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக இதுவரை இல்லாத வகையில் மிக அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஆகஸ்ட் 24ஆம் தேதி வேறு எந்த பிரபல நடிகர்களின் படங்களும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் அறிமுகமாகும் திரைப்படம் விவேகம் படத்துடன் மோதுகிறது. ஆம், 'பப்ளிக் ஸ்டார்' என்ற பட்டத்துடன் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள 'தப்பாட்டம்' திரைப்படம் அதே ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளிவரவுள்ளது. மிஜிபூர் ரஹ்மான் இயக்கியுள்ள இந்த படத்தில் டோனா ரோசாரியா என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா அஜித்தின் 'விவேகம்' படத்துடன் மோதுவது குறித்து கூறியபோது, நாங்கள் ரிலீஸ் தேதியை பல நாட்களுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். இருப்பினும் அஜித் படத்துடன் ரிலீஸ் ஆவதை பெருமையாக கருதுகிறோம் என்று கூறினார்.

மேலும் இந்த படம் விவசாயிகளின் பிரச்சனையை மையப்படுத்திய கதை என்றும் இந்த படத்திற்கு விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் அய்யாக்கண்ணு அவர்கள் வாழ்த்து தெரிவித்ததாகவும் தயாரிப்பாளர் கூறினார்.