close
Choose your channels

'ஐத்தலக்கா': அனிருத்தின் தரை லோக்கல் குத்து பாட்டு

Friday, October 16, 2020 • தமிழ் Comments

ராக்ஸ்டார் அனிருத்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒட்டுமொத்த திரையுலகினரும் இசை ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அனிருத்தின் பிறந்தநாளை அடுத்து ’மாஸ்டர்’ திரைப்படத்தின் ’கொயட் பண்ணுடா’ என்ற பாடலின் லிரிக் விடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி அனிருத் பாடிய ’ஐத்தலக்கா’ என்ற தர லோக்கல் பாடல் ஒன்று விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கர் என்பவர் இயக்கத்தில் கணேஷ் சந்திரசேகரன் என்பவர் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டைநாய்’. இந்த திரைப்படத்திற்காக அனிருத் ‘ஐத்தலக்கா’ என்று தொடங்கும் தர லோக்கல் குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கே சுரேஷ், சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகியுள்ள படத்தை இந்த படம் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் தயாராகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz