தளபதி விஜய்க்கு ஒரு தரலோக்கல் பாடல் கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Friday,February 08 2019]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை பின்னி மில்லில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த பாடல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தளபதி விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த தரலோக்கல் பாடலின் படப்பிடிப்பு தான் தற்போது நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும், இந்த பாடல் திரையில் தோன்றும்போது திரையரங்கமே அதிரும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல் செய்வது அரைவேக்காட்டுத்தனம்! பிரபல நடிகர்

வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைக்க ஒருசில கட்சிகளுடன் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,

சென்னையில் சிறப்பு பூஜை: அஜித் பட தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்பாடு!

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வரும் 24ஆம் தேதி சென்னையில் சிறப்பு பூஜை செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித், விஜய்யை அடுத்து சூப்பர் ஸ்டாரை நெருங்கிய யோகிபாபு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்திலும் காமெடி வேடத்தில் இவர் நடித்து வருகிறார்

சூர்யாவின் 'என்.ஜி.கே' டீசர்: புதிய அப்டேட்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்.ஜி.கே.' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாளை முதல் ஓவியாவின் அடல்ட் பட டிரைலர்

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்றான 90ml திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று