முதல்முறையாக சூப்பர் ஸ்டார் தந்தையுடன் நடிக்கும் பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Sunday,February 13 2022]

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகருடன் முதல் முறையாக அவருடைய மகள் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் மோகன்பாபு என்பதும், இவர் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மோகன்பாபுவின் மகளான மகளும் தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு முதல் முறையாக தனது தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து லட்சுமி மஞ்சு தனது இன்ஸ்டாகிராமில், ‘என்னுடைய நீண்ட நாள் கனவான என்னுடைய முதல் ஹீரோ அப்பாவுடன் இணைந்து நடிக்கிறேன். இத்தனை வருடங்களில் முதல் முறையாக அவருடன் நடிப்பது ஒரு மிகப்பெரிய திரைப்பட விருதை வென்றது போன்ற உணர்வை நான் பெறுகிறேன். இந்த நாளுக்காக நான் மிகப்பெரிய அளவில் காத்திருந்தேன் என்பதும் எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதும் இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் காணும் கனவுக்கு காலாவதி என்பதே இல்லை என்பதால் எப்போதும் கனவு காண்பதை நிறுத்த வேண்டாம் என்றும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் நமது கனவு நிறைவேறும் என்றும் தனது பதிவில் நடிகை லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.

More News

டிசர்ட் மட்டுமே அணிந்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர் பட நடிகை!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் வெறும் டி-ஷர்ட் மட்டுமே அணிந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வரை சந்தித்த புனித் ராஜ்குமாரின் சகோதரர்: என்ன காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பில் உயிரிழந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து உள்ளார்.

'தலைவர் 169' படத்தில் இணையும் இரண்டு பிரபல ஹீரோக்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 169' திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்க,

சென்னை சூப்பர்கிங்ஸ் எடுத்த 19 வீரர்களின் பட்டியல்!

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் ஏலம் நேற்றும் இன்றும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 19 பேர்கள் வரை எடுக்கப்பட்டுள்ளனர்.

விஜய்யின் 'பீஸ்ட்' அரபிக்குத்து பாடலை பாடும் 'செல்லம்மா' ஜோடி!

விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.