கோடிக்கணக்கில் வாரிகொடுத்த அரசன்னே...? சத்தமில்லாமல் நடந்த காரியம்...!

முதல்வரின் கொரோனா நிதிக்கு அரசன் சோப் நிறுவனம், மிகப்பெரிய தொகையை நிவாரணமாக அளித்துள்ளது.

தமிழகத்தில், கோவையைச் சார்ந்த பிரபு சோப் வொர்க்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள சோப் தான் அரசன். இதை துவங்கியவர் கோவையில் சேர்ந்த அருண் சிங் என்பவர் தான். சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த சோப் நிறுவனமானது, தற்போது தமிழகத்தில் மிகச்சிறந்த பிஸ்னஸ் மாடல்களில் சிறப்பான ஒன்றாக வலம் வருகிறது. தமிழகத்தில் விற்பனையாகக்கூடிய முன்னணி சோப்களில் ஒன்றாக அரசன் விளங்குகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதி தொகையை, பிரபு சோப் வொர்க்ஸ் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பாக 1.5 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வரை நேரில் சந்தித்து யாரும் தொகையை வழங்கவில்லை, சத்தமில்லாமல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அண்மையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நிதி கொடுத்து, முதல்வரிடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. பிரபு சோப் வொர்க்ஸ் சத்தமே இல்லாமல் பெரிய தொகையை கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ!

கொரோனா வைரஸ்க்கு இன்று ஒரே நாளில் இயக்குனர் அருண்ராஜ் காமராஜரின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதிஷ் வீரா ஆகிய இருவர் பலியாகியுள்ளது உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

அருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்!

கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனுக்கு திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் இன்று காலை பேரிடியாக பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா

கொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை!

தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிக்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

எனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை?

சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானிசங்கர் 'மேயாதமான்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட பல

முதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழக மக்கள். தொழிலதிபர்கள்