ஜேம்ஸ்பாண்ட் படத்தை அடுத்து மேலும் ஒரு ஹாலிவுட் பட ரிலீஸ் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது தெரிந்ததே. குறிப்பாக திரைப்படங்கள் ரிலீஸ் பல மாதங்களுக்கும், ஒரு சில திரைப்படங்கள் வருடக்கணக்கிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தை அடுத்து தி பேட் மேன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராபர்ட்சன் நடித்த ‘தி பேட்மேன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஹாலிவுட் திரைப்படம் முதல் கோலிவுட் திரைப்படங்கள் வரை கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாதங்களுக்கு ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 

More News

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கத்தில் நயன்தாரா? ஆச்சரிய தகவல் 

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா, தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தால் அறிமுக இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களுடன் கூட நடிக்க தயங்க மாட்டார் என்பது தெரிந்ததே.

அஜித்துடன் நடிக்கும் விஜய்யின் ரீல் மகன்: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'மெர்சல்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

ஒரு நிமிட வீடியோவில் படங்களும் கேரக்டர்களும்: த்ரிஷா வெளியிட்ட வீடியோ!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா என்பது தெரிந்ததே. 'ஜோடி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த த்ரிஷா 'மௌனம் பேசியதே'

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவைகளில் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

'சிங்கம்' பட நடிகரின் சகோதரர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக் 2011 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியானது.