பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 31 2022]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளன.

அந்தவகையில் பிப்ரவரி 4-ஆம் தேதி விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை அடுத்து பிப்ரவரி 11-ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ’கடைசி விவசாயி’ மற்றும் விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மார்ச் 11ஆம் தேதி சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 25ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே நாளில் கார்த்தியின் ’விருமன்’ திரைப்படமும் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விஜய்யின் ’பீஸ்ட்’ மற்றும் யாஷின் ‘கேஜிஎப் 2’ திரைப்படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்றும் ஏப்ரல் 28 ஆம் தேதி எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து சினிமா ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா பட இயக்குனர்!

நயன்தாரா நடித்த படத்தின் இயக்குனர் தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

மினி ஸ்கர்ட்டில் மாஸ்டர் மாளவிகா… ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்ட புகைப்படம்!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக

காந்தி மாதிரி ஒரு மஹானா வாழ்வியா காந்தி மஹான்? விக்ரமின் 'மஹான்' டீசர்

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மஹான்' திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

புது வரலாற்றுச் சாதனை படைத்த ரஃபேல் நடால்!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால்

முதல் டாஸ்க்கில் இருந்தே வெளியேறிய வனிதா: ஆரம்பித்ததா சண்டை சச்சரவு?

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரம் கழித்துதான் சண்டை சச்சரவு தொடங்கும் என்ற நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே சண்டை தொடங்கிவிட்டது பெரும் பரபரப்பை