close
Choose your channels

'ஹே ராம்' படத்துடன் கனெக்சன் ஆன 'விஸ்வரூபம் 2'

Saturday, June 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வெளிவரும் கமல்ஹாசன் படம் இது என்பதால் இந்த படத்திற்கு அவர்ருடைய ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் இடம்பெற்ற 'நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளார். அவருடன் கெளஷிக் சக்ரவர்த்தி, மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர் ஆகியோர்களும் பாடியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த பாடலுக்கும் 'ஹே ராம்' படத்தில் இடம்பெற்ற 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடலுக்கும் ஒரு கனெக்சன் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 'இசையில் தொடங்குதம்மா' என்ற பாடலை ஹிந்துஸ்தானி கிளாசிக் பாடகர் அஜய்சக்கரவர்த்தி அவர்கள் பாடியிருந்தார். அஜய் சக்கரவர்த்தி அவர்களின் மகள் கெளஷிக் சக்கரவர்த்திதான் 'நானாகிய நதிமூலம்' என்ற பாடலை பாடியவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை, மகள் பாடகர்கள் கமல்ஹாசன் படத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.