தீபவாளி முன்னிட்டு விடுமுறை அறிவித்த தமிழக அரசு!

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு பலதரப்புகளில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பொதுமக்கள் மத்தியில் பரவலாக வரவேற்பு பெற்ற தீபாவளி இந்த ஆண்டு 04.11.2021 ஆம் தேதி (வியாழக்கிழமை) வருகிறது. இந்த தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே விடுமுறை இருப்பதால் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 05.11.2021 வெள்ளிக்கிழமையும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாளான 05.11.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20.11.2021 (மூன்றாம் சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

More News

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து- உயர்நீதிமன்ற மரைக்கிளை!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

நாளை 'ஜெய்பீம்' ரிலீஸ்: இன்று ரூ.1 கோடி நிதியுதவி செய்த சூர்யா!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று தமிழக முதல்வரிடம் சூர்யா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

நீ பிரச்சனையை கிளப்புறதுக்குன்னே இருக்கியா? பிரியங்காவிடம் ஆவேசமாக மோதும் இமான்!

 நீ பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டாயா என பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்திய அணியின் தோல்விக்கு இதுதான் காரணம்… விளாசும் முன்னாள் வீரர்!

டி20 உலகக்கோப்பை அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பை இந்தியா நழுவவிட்டு இருக்கிறது.