புகார் பெட்டி பிரச்சாரம் எல்லாம் மலையேறி விட்டது… எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகார் பெட்டி வைத்து அதன்மூலம் குறைகள் கேட்கப் பட்டது. அதுபோன்ற பிரச்சாரத்தை தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஆனால் நாம் எவ்வளவோ நவீன வசதிகளுக்கு முன்னேறி விட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார்.

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 1100 இலவச குறைத் தீர்ப்பு சிறப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. தமிழக மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி 24 மணிநேரமும் தங்களது குறைகளை நேரடியாகத் தமிழக அரசுக்குத் தெரிவிக்க முடியும். இதனால் குறைகளும் மிக விரைவாகத் தீர்த்து வைக்கப்பட்டு விடும். இச்சிறப்பு திட்டத்தைக் குறித்து தமிழகச் சட்டப் பேரவையில் கடந்த செப்டம்பர் மாதமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதையொட்டி தற்போது இலவசக் குறைத் தீர்ப்பு சிறப்பு திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி மாவட்டம் தோறும் குறைத் தீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் எந்தவிதமான பயன் ஏற்பட போகிறது என்று தமிழக முதல்வர் எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பியதோடு இனிமேல் திமுகவிற்கு மனு வாங்கும் வேலை கூட இருக்காது என்றும் ஸ்ரீவைகுண்டத்தில் பேசிய தமிழக முதல்வர் அதிரடி கருத்து வெளியிட்டு உள்ளார்.

More News

படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய “டான்“ நடிகர்… வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

'ஆர்.ஆர்.ஆர்' ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்: எத்தனை கோடி தெரியுமா?

எஸ்எஸ் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வசூலை குவித்தது என்பதும்

'தனுஷின் 'கர்ணன்' படத்தின் சூப்பர் அப்டேட்; கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

மீண்டும் முதல் இடத்தை பிடித்த ஜெஃப் பெசாஸ்!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலகப் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து உள்ளார்.

மீன் குளம்பு வைக்காத மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் மீன் குளம்பு வைக்காமல் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டு இருந்த மனைவியை அவருடைய கணவனே கோடாரியால் வெட்டியச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது