ஒரு சில நிமிடமே வரும் De-Aging காட்சிகளுக்கு இத்தனை கோடியா? 'தளபதி 68' லேட்டஸ்ட் அப்டேட்..!

  • IndiaGlitz, [Saturday,December 09 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ திரைப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இளவயது வேடம் ஒன்றில் நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகின,

இந்த இளவயது கேரக்டருக்காக சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று இள வயது வேடத்திற்கான தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டிருந்தார். அவரது உருவத்தை முழுவதும் ஸ்கேன் செய்து De-Aging டெக்னாலஜி மூலம் அவரை இளமையாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

’தளபதி 68’ திரைப்படத்தில் விஜய் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இளமையான காட்சிகளில் தோன்ற இருக்கும் நிலையில் அதற்காக செய்த செலவு மட்டும் கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

More News

இன்னொரு தடவை சொன்னா.. 3 போட்டியாளர்களுக்கு வார்னிங் கொடுத்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவு குறையவே இல்லை. முதல் நாளிலிருந்து தற்போது 70 நாளை நெருங்கி

இரவில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்: நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை..!

வெள்ள நிவாரண பணியில் இருக்கும் ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை கூறிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிறகடிக்க ஆசை: வீட்டிற்குள் வந்த ஸ்ருதி .. அண்ணாமலை வீட்டில் மீண்டும் பிரச்சனை கிளம்புமா?

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் திடீர் திருப்பமாக ரவி மற்றும் ஸ்ருதி தற்போது அண்ணாமலையின் வீட்டுக்குள் வந்துள்ளனர்

வெள்ளத்திற்கு பின் களை கட்டும் ரிலீஸ் திரைப்படங்கள்.. டிசம்பர் 15ல் 6 படங்கள்..!

சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் திரையரங்குகளுக்கு செல்வதையே மக்கள் சில நாட்களாக மறந்து விட்டார்கள். வெள்ள பாதிப்பின் போது

தரமில்லாமல் விளையாடுகிறார்கள்.. விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: கமல்ஹாசன்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தரம் இல்லாமல் விளையாடுகிறார்கள் என்றும் அவர்களை விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின்