close
Choose your channels

ஒரே நேரத்தில் அஜித், விஜய்யுடன் நடிக்கும் பிரபல நடிகர்!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படங்களில் ஒரே நேரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அஜித் நடக்க இருக்கும் ’அஜித் 61’ திரைப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் விஜய் நடிக்க இருக்கும் ’விஜய் 66’ படத்தை வம்சி இயக்க இருக்கிறார் என்பதும் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ’அஜீத் 61’ திரைப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் 16 வருடங்கள் கழித்து அவர் அஜித்துடன் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ’விஜய் 66’ படத்திலும் பிரகாஷ்ராஜ் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் மாறி மாறி பிரகாஷ்ராஜ் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

 

ஏற்கனவே அஜீத், விஜய்யுடன் பல படங்களில் நடித்திருந்த பிரகாஷ்ராஜ், தற்போது அஜித் விஜய் ஆகிய இரு மாஸ் நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளது திரையுலகினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.