ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷ் படத்தில் இணைந்த பிரபல நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,September 05 2022]

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் இன்னொரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிக்கும் 36 ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ’சைரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷின் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அனுபமா பரமேஸ்வரனின் கேரக்டர் இந்த படத்தின் கதைக்கு மிகவும் முக்கியத்துவமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

பிரபல நடிகையுடன் தேவிஸ்ரீ பிரசாத் ரகசிய திருமணமா?

பிரபல நடிகையுடன் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

திருமணத்திற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அமீர்-பாவனி!

பிக் பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் விரைவில் வாழ்க்கையில் இணைய உள்ள நிலையில் அதற்கு முன்பே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிளாக் பண்ணவும் முடியலை, ரிப்போர்ட் பண்ணவும் முடியலை சரியான தொல்லையப்பா: நடிகர் கார்த்தி டுவிட்

'ஓய், உம்மை பிளாக் பண்ணவும், முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை சரியான தொல்லையப்பா' என நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிம்புவின் 'கொரோனா குமார்' படம் என்ன ஆச்சு? தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தகவல்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதேபோல் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல'

பான் இந்திய படைப்பாக உருவாகும் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'

நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.