'துணிவு' படத்தில் பாடல் பாடிய பிரபல நடிகை.. அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித் நடித்த ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் இந்த படம் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் வெளிநாட்டில் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனமும் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும் பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் 3 பாடல் இடம்பெற்று உள்ளதாகவும் அதில் ஒரு பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் ’சில்லா சில்லா’ பாடல் என்ற இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியார் ஒரு பாடலை பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மஞ்சுவாரியர் தனது சமூக வலைத்தளத்தில் ஜிப்ரான் இசையில் ’துணிவு’ படத்தில் ஒரு பாடலை பாடியது தனக்கு திரில்லிங் அனுபவமாக இருந்தது என்றும் இந்த பாடலை கேட்க அனைவரும் தயாராக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜிப்ரானுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் நடிகை மஞ்சுவாரியர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ’துணிவு’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மஞ்சுவாரியர் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தளபதி 67' இந்த படத்தின் ரீமேக்கா.. உரிமையை லோகேஷ் வாங்கியதாக தகவல்!

 தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' திரைப்படம் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் என்றும் அந்த படத்தின் உரிமையை லோகேஷ் கனகராஜ் வாங்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை

இதுதான் மோசமான சீசன்.. கமல் போட்ட வழக்கால் அதிர்ந்த போட்டியாளர்கள்

இதுவரை வந்த பிக்பாஸ் சீசன்களிலே மோசமான சீசனாக இந்த சீசன் மாறி வருகிறது  என கமல்ஹாசன் போட்டியாளர்கள் மீது வழக்கு தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசனின் 'ஹே ராம்', 'ஆளவந்தான்' பட நடிகர் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'ஹே ராம்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் இயக்குனர் விக்ரம் கோகலே இன்று காலமானார். அவருக்கு வயது 77. 

'வாரிசு' செகண்ட் சிங்கிள் தேதி இதுவா? இதிலும் ஒரு டுவிஸ்ட்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதம் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே. 

இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே.. நீதிமன்ற டாஸ்க்கை கலாய்த்த கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்ற நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதும்,  போட்டியாளர்கள் குற்றவாளிகளாகவும்,