தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,January 11 2022]

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், ஷோபனா, ஷெரின், ரைசா வில்சன் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் என்பதும் அவர்களில் சிலர் குணமாகி டிஸ்சார்ஜ் பெற்று விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். தனக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு பாதுகாப்பாக இருக்கவும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

More News

எந்தவித உபகரணங்களும் இல்லாமல் வொர்க்-அவுட் சமந்தா: வேற லெவல் வீடியோ வைரல்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா பிஸியான நடிகை என்றாலும், இந்த பிஸியான நேரத்திலும் அவர் உடற்பயிற்சி செய்வதில் தவறுவதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜூ, பிரியங்காவை தொடர்ந்து 3வது இடத்திற்கு முந்தும் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 100 வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்கள் என்பதும் இவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆக வரும்

39 வயதிலும் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நாயகி!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் 39 வயதிலும் வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது

'விக்ரம்' படத்தை அடுத்து பிக்பாஸ் ஷிவானி ஒப்பந்தமான படம் எது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன் என்பதும் இவர் தற்போது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்'

கோல்டன்குளோப்ஸ் விருது பெற்ற முதல் திருநங்கை… உருக்கமான பதிவு!

இந்த ஆண்டிற்கான கோல்டன் குளோப்ஸ் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ்