close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தை உறுதி செய்த பிரபல இயக்குனர்!

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விருமன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கார்த்தி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது என்றும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்தி நடிக்கக்கூடிய அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் ராஜுமுருகன், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதி செய்துள்ளார். ’விருமன்’ திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ள ராஜூமுருகன் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஜப்பான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் கார்த்தியை காணலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜூமுருகன் இயக்கிய ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ மற்றும் ’ஜோக்கர்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.