அஜித் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் ஹாலிவுட்டிலேயே 100 நாள் ஓட வைப்பேன்.. பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

அஜித் மட்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலேயே 100 நாள் ஓடவைக்கும் படத்தை என்னால் இயக்க முடியும் என பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என பல இயக்குனர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ’கோல்ட்’ என்ற படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தனது சமூக வலைதளத்தில் அஜித் குறித்து தெரிவித்துள்ளார்.

‘நேரம்’ படம் ரிலீசானபோது அஜித் தன்னை பாராட்டியதாக நிவின்பாலி என்னிடம் சொன்னார் என்றும், அதன் பிறகு அவரை பார்க்க அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவை பலமுறை முயற்சித்தும் அவரை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளாக நான் முயற்சி செய்தும் அஜித்தை பார்க்க முடியவில்லை என்றும் அஜித்துக்கு வயது ஆவதற்குள் ஒருமுறையாவது அவரை பார்த்து கதை சொல்லிவிடு விட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித் தனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அந்த படத்திற்கு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தால், இந்தியாவில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் 100 நாட்கள் ஓடும் படத்தை என்னால் இயக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஜித் மட்டுமின்றி விஜய், ரஜினி, கமல் ஆகியவர்களும் வாய்ப்பு கொடுத்தால் அவர்களுக்கு ஒரு நல்ல படத்தை கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

’நேரம்’ ’பிரேமம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனுக்கு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'காந்தாரா' இரண்டாம் பாகத்தில் செம ட்விஸ்ட்.. பக்கா பிளான் போடும் ரிஷப் ஷெட்டி!

 கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் இதற்காக ரிஷப் ஷெட்டி பக்கா

அஜித் கலந்து கொண்ட விஜய் திருமணம்... தளபதி மெட்டி போடும் அழகே தனி.. அரிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் திருமண புகைப்படங்கள் தற்போது திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

என்ன ஒரு தைரியம்?  குளத்தில் இறங்கி யானையை குளிப்பாட்டும் நடிகை: வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் குளத்தில் இறங்கி இரண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவரா?

கடந்த நூறு நாட்களுக்கு மேல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முடிவடைய போகிறது என்பதும் உலக நாயகன் கமலஹாசன் நாளை மறுநாள் டைட்டில் வின்னர் யார் எ

மிட்வீக் எவிக்சனில் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் முடிவடையும் நிலையில் இந்த சீசனில் சில புதுமையான அம்சங்களை பார்த்து வருகிறோம்.