எனக்கு அவர் சாக்லேட் எல்லாம் வாங்கி கொடுப்பார்: பிரபல ஹீரோ குறித்து அம்மு அபிராமி

  • IndiaGlitz, [Sunday,June 12 2022]

நடிகை அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பிரபல ஹீரோ சாக்லேட் வாங்கி கொடுப்பார் என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்த ‘பைரவா’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அதன்பின் ’ராட்சசன்’ ’அசுரன்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த அவர், தற்போது குக் வித் கோமாளி மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளார். மேலும் அம்மு அபிராமி கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அருண் விஜய்யுடன் அம்மு அபிரமி நடித்த ‘யானை’ திரைப்படம் ஜூன் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் மற்றும் அருண் விஜய்யுடன் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அம்மு அபிராமி கூறியுள்ளார்

அதில் ’நான் இதுவரை பார்த்த நடிகர்களில் மிகவும் இனிமையானவர் அருண் விஜய்தான் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு அன்பாக இருப்பார். என்னிடம் மட்டும் இல்லாமல், எல்லோரிடமும் மிகவும் தன்மையுடன் பேசுவார். எனக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதை தெரிந்து அவர் ஷூட்டிங் வரும்போதெல்லாம் சாக்லேட் வாங்கி வருவார். எங்களுக்குள் படப்பிடிப்புக்கு வெளியே ஒரு நல்ல ஒரு நட்பு இருந்ததால்தான் படத்திலும் எங்களது கேரக்டர் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ‘யானை’ படம் நான் பார்த்துவிட்டேன், நான் எதிர்பார்த்ததை விட சூப்பராக படம் வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.

More News

சொன்ன சொல்லை காப்பாற்றிய லாரன்ஸ்: என்ன செய்தார் தெரியுமா?

நடிகரும், நடன இயக்குனரும், இயக்குநருமான லாரன்ஸ் சொன்ன சொல்லை காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பேங்க் கொள்ளை மட்டுமல்ல, இன்னொரு டுவிஸ்ட்டும் இருக்கும்: 'ஏகே 61' படம் குறித்த தகவல்

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கமல்ஹாசனை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த பிரபலம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளதை அடுத்து திரை உலகப் பிரபலம் ஒருவர் கமல்ஹாசனை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்துள்ளார்.

அடடே, சிம்ரன் மகன் இளைஞராகிவிட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்

கடந்த 90கள் மட்டும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த சிம்ரனின் மகன் தற்போது இளைஞர் ஆகி உள்ளது அவரது பிறந்த நாள் புகைப்படத்தில் இருந்து தெரிய வந்ததை

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமண வரவேற்பில் அஜித் குடும்பத்தினர்! வைரல் புகைப்படம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,