close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணையும் பிரபல தமிழ் ஹீரோ?

Thursday, September 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகயிருக்கும் ‘ஜெயிலர்’ படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது என்பது தெரிந்ததே.

ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் இணைந்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ’பருத்திவீரன்’ சரவணன் மற்றும் அறந்தாங்கி நிஷா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரபல தமிழ் ஹீரோ ஜெய் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜெய்-தமன்னா ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.