பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்: ரஜினி படமாக மாறிய இவரது நாவல்

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 87.

எழுத்தாளர் மகரிஷி 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். தஞ்சாவூரில் பிறந்த பாலசுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட மகரிஷி மின்வாரியத்தில் பணியாற்றியவர். தமிழ் மேல் உள்ள காதலால் எழுத்தாளராக மாறினார்.

இவர் எழுதிய நாவல்களில் ஒன்றுதான் ரஜினிகாந்த், சிவகுமார் நடித்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ என்ற திரைப்படமாக மாறியது. மேலும் இவரது நாவல்கள் ’என்னதான் முடிவு’, ‘பத்ரகாளி, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘வட்டத்துக்குள் சதுரம்’, ’நதியை தேடி வந்த கடல்’ ஆகிய திரைப்படங்களாக மாறியுள்ளது.

மகரிஷின் மறைவிற்கும் திரையுலகினர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

விஜய்யின் 'தங்கமான' பாணியை பின்பற்றிய சூர்யா!

தளபதி விஜய், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தினத்தில் அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் தங்க நாணயம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பாஜகவில் இணையும் கமல்-ரஜினி பட நாயகி!

கோலிவுட் திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த பல வருடங்களாக அரசியலில் இருந்து வருபவர்களில் ஒருவர் நடிகை விஜயசாந்தி.

பேனர் வழக்கில்  நீதி தாமதமாக கிடைத்துள்ளது: கமல்ஹாசன் 

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள பேனர் விழுந்ததால் தடுமாறி கீழே விழுந்தார்.

'ஒத்த செருப்பு' பார்த்ததும் பார்த்திபனிடம் உளறினேன்: எஸ்.ஏ.சந்திரசேகர்

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து 'ஒத்த செருப்பு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்த நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எஸ்ஏ சந்திரசேகர்

அக்டோபர் 11ல் ரிலீஸ் ஆகும் 5 படங்களில் 2 த்ரில் படங்கள்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக திகில் படங்கள் அதிகம் தயாராகிவரும் நிலையில் வரும் அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸாகும் 5 படங்களில் மூன்று படங்கள் திகில் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது