ஜிவி பிரகாஷின் மிகச்சிறந்த படம்: 'செல்பி' படம் குறித்து பிரபல அரசியல்வாதி கருத்து!

ஜிவி பிரகாஷ் நடித்த ‘செல்பி’ திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜீவி பிரகாஷின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செல்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறார்

இந்த நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது: நீட் தொடர்பான மோசடிகள், மாணவர்களின் தற்கொலைகள், கொலைகள் மற்றும் அநியாயமான கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம் செல்பி. ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன், புதுமுகம் குணநிதி ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள். நான் பார்த்த ஜிவி பிரகாஷ் படங்களில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘செல்பி. அனைவரும் காண வேண்டிய மிகச்சிறந்த படத்தை இயக்குனர் மதிமாறனுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

More News

16 வருடங்களுக்கு பின் தமிழில் ரீஎண்ட்ரி ஆகும் அஜித் பட நாயகி!

அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகிறார் .

ஆல்யா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை: வைரல் புகைப்படம்!

'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை ஆலியா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 

கல்லூரியில் சேரும் முன் இந்த படத்தை பாருங்கள்: 'செல்பி' இயக்குனர்

தமிழகம் ஒருபக்கம் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக உருவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கல்வித்துறையில் மாபியாக்கள் நுழைந்து உள்ளதை தான் இந்த 'செல்பி' படம் எடுத்துக் காட்டுவதாகவும்

லிங்குசாமியின் 'தி வாரியர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி இயக்கி வரும் 'தி வாரியர்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 'கே ஜி எஃப் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு: பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.