close
Choose your channels

நடிகர் அசோக் செல்வனின் முதல் காதலி: வைரல் புகைப்படம்!

Monday, March 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக் செல்வனின் முதல் காதலி என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி திரைப்படம் ’மன்மதலீலை’. இந்த படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் அசோக் செல்வன் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகிய இருவரும் இருக்கும் ’மன்மதலீலை’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நமது மன்மதன் அசோக் செல்வனின் முதல் காதலி ஸ்மிருதி என குறிப்பிடப்பட்டுள்ளது. கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். தமிழழகன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தில் அசோக்குமார், சம்யுக்தா மேனன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.