close
Choose your channels

ஜீவா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜீவா நடித்த 'கீ' மற்றும் 'கொரில்லா' ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படத்தின் இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'சீறு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். பிரசன்னாகுமார் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீவா ஜோடியாக ரியா சுமன் என்ற புதுமுக நடிகை நடித்து வரும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நவ்தீப் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் சதீஷ் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.