கமல்ஹாசனுக்கு இதுதான் முதல்முறை: 'விக்ரம்' செய்த சாதனை!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துவிட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்தை கொண்டாடின என்பதும் தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகினர்களும், வட இந்திய திரையுலகினர்களும் கமல்ஹாசனுக்கும் படக்குழுவினர்களுக்கு பாராட்டுகளை குவித்தனர் என்பதும் தெரிந்ததே.

இன்னொரு பக்கம் ‘விக்ரம்’ படத்தின் வசூல் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பதை பார்த்து வருகிறோம். ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 40 கோடி ரூபாய் வசூலானது என்பதும், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் ஆனது என்பதும் டிரேடிங் வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி தெரியவந்தது.

அதன்பின் 8 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாயை தாண்டிய இந்தப் படத்தின் வசூல் தற்போது இரண்டு வார முடிவில் 300 கோடி ரூபாய் என்ற அளவில் வசூலை தொட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படம் ஒன்று 300 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு வருஷம் முடிஞ்சிருச்சு: நடிகர் மகத் பதிவு செய்த க்யூட் புகைப்படங்கள்!

நடிகர் மகத் தனது குழந்தைக்கு ஒரு வயது முடிந்துவிட்டது என்று கூறி குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஷாலினி நடிக்கின்றாரா?  அஜித் தரப்பு விளக்கம்

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் ஏற்கனவே இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

'மாஸ்டர்' படம் பார்த்து மிரண்டு விட்டேன்: பிரபல பாலிவுட் நடிகர் பேட்டி

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தை பார்த்து மிரண்டு விட்டேன் என்றும் விஜய்க்கு நான் மிகப்பெரிய ரசிகர் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

அருண் விஜய்யின் 'யானை' ரிலீஸ் தள்ளி போகிறதா?

அருண் விஜய் நடிப்பில் உருவான 'யானை'  திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது

மீண்டும் இணையும் இளையராஜா - யுவன்: எந்த படத்திற்கு தெரியுமா?

முதல் முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்தனர்.