'வாரிசு' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபலம்!

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன், குடும்பத்துடன் 'வாரிசு’ படத்தை பார்த்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் 'வாரிசு’ படத்தில் உள்ள ஒவ்வொரு எமோஷனல் காட்சியை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது, என் இதயத்தை தொட்ட ஒரு திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு படமாக 'வாரிசு’ அமைந்துள்ளது, இந்த படத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'வாரிசு’ படத்தின் முதல் விமர்சனமே செம பாசிட்டிவ்வாக வந்துள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து: தமிழக அரசின் உத்தரவால் விஜய், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பாக அதிகாலை காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது

மைனாவுடன் மீண்டும் ஜோடி டான்ஸ் ஆடும் விக்ரமன்: வைரல் வீடியோ

 பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே விக்ரமன் மற்றும் மைனா ஓரிருமுறை டான்ஸ் ஆடிய நிலையில் தற்போது மீண்டும் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'வாரிசு' படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆன விஜய்: குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்

 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனையில் விஜய் அட்மிட் ஆனதாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள குஷ்பூ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணிவா? வாரிசா? டாஸ் போட்டு முடிவு செய்த ரசிகர்கள்

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் கிட்டத்தட்ட சம அளவில்

இந்த மாதிரி ஒரு அட்டாக்கை இந்தியா யோசித்து கூட பார்த்திருக்காது: 'பதான்' டிரைலர்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த 'பதான்' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய செய்திகள் கடந்த சில நாட்களாக வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.