தென்னிந்திய நடிகைகளில் சமந்தாவுக்கு கிடைத்த முதல் பெருமை!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படங்களின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருவதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். குறிப்பாக சமூக வலைதளங்களில் வித்தியாசமான புரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது டுவிட்டரில் எமோஜி பெறப்படுவது ஒரு வாடிக்கையாகிவிட்டது. விஜய் நடித்த மெர்சல், ரஜினிகாந்த் நடித்த ’காலா’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ பிரபாஸ் நடித்த ’சாஹோ’ ஆகிய படங்கள் ரிலீசானபோது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக நடிகை ஒருவரின் படம் ரிலீசாகும்போது டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா நடித்துள்ள ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த தொடரின் புரமோஷனுக்காக டுவிட்டரில் சமந்தா படத்தின் எமோஜி பெறப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகை ஒருவருக்கு டுவிட்டரில் எமோஜி பெறப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பதும் அந்தப் பெருமை சமந்தாவுக்கு தற்போது கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சமந்தா ரசிகர்கள் அவருக்கு தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

More News

அதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர்? யார் இந்த வினய் ரெட்டி?

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜோ பிடன், பதவி ஏற்றுக்கொண்ட உடன் தனது உரையை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தினார்.

'இயேசு அழைக்கிறார்' அமைப்பில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத முதலீடுகள் இத்தனை கோடியா?

கடந்த மூன்று நாட்களாக 'இயேசு அழைக்கிறார்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே.

'வலிமை' அப்டேட்டை யாரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டார்கள் தெரியுமா? கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ!

தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

காதலுக்கு வயதில்லை: 52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் 'தனி ஒருவன்' பட நடிகை!

காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 52 வயது அஜித் பட வில்லன் நடிகர் ஒருவரை நடிகை ஒருவர் காதலிக்கும் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

டிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று முடித்ததோடு தனது காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆனார்