close
Choose your channels

விஜய்சேதுபதியின் முதல் மலையாள பட டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக்

Monday, June 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி என்ற படத்திலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு 'மார்கோனி மத்தாய்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியுடன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இந்த படத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் தமிழ், மற்றும் மலையாள விஜய்சேதுபதி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சனில் கலாதில் இயக்கி வரும் 'மார்கோனி மத்தாய்' படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார். சாஜன் கலாதில் ஒளிப்பதிவில், ஷமீர் முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.