10 மாவட்டங்களுக்கு நாளையும் பொதுவிடுமுறை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,November 25 2020]

வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே இன்று பொதுவிடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில் நாளையும் 16 மாவட்டங்களுக்கு அரசு பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகள் என எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், ஆகிய 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட 16 மாவட்டங்களிலும் பேரிடர் பணியில் உள்ள ஊழியர்கள் தவிர மற்ற பணியாளர்கள் பணிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அரசாணையும் சற்றுமுன் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

உயிர் நண்பனை எதிரியாக்கிய விஷால்!

நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்து வரும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த்ஷங்கர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும்

புயலில் விழுந்த மரங்கள்: சாமானியன் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்

வங்க கடலில் உருவாகிய நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

உலகப் பணக்காரர் வரிசையில் பில்கேட்ஸையே பின்னுத்தள்ளிய எலான் மஸ்க்!!!

SpaceX நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் எலான் மஸ்க் உலக பணக்காரர் வரிசைப் பட்டியலில் உலகின் முன்னணி பணக்காரரான பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 2 ஆவது இடத்தைப் பிடித்து

நிவர் புயலுக்கு பெயரை தேர்ந்தெடுத்தது யார்???

பொதுவாக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு அதை ஒட்டியுள்ள வங்கதேசம்,

புயல் எதனால் ஏற்படுகிறது??? எளிமையான விளக்கம்!

பூமியின் சுழற்சி காரணமாகக் காற்று அலைக்கழிக்கப்பட்டு அதன் வேகம் அதிகரித்து புயலாக உருமாறுகிறது என அறிஞர்கள் கூறுகின்றனர்.