கேலி செய்த ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: நெட்டிசன்கள் பாராட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லீக் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தவான் சிறப்பாக விளையாடி 117 ரன்களும் விராத் கோஹ்லி 82 ரன்களும் குவித்தார்.

நேற்றைய போட்டியை காண லண்டனில் இருந்து மட்டுமின்றி இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருந்தனர். இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது விராத் கோஹ்லி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது எல்லைக்கோட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் சிலர் கேலி செய்து கூச்சல் போட்டனர். இதனால் ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தி அடைந்தார்.

உடனே அதனை பார்த்த விராத் கோஹ்லி ரசிகர்களை நோக்கி, ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்ய வேண்டாம் என்றும், அவருக்கும் சேர்த்து கைதட்டி உற்சாகப்படுத்துங்கள்' என்றும் சைகையில் கூறினார். விராத் கோஹ்லியின் இந்த நல்ல மனதிற்கு கிரிக்கெட் ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித்தும் விராத் கோஹ்லியின் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார்.

More News

ரஜினி, கமலிடம் ஆலோசனை நடத்திய பிறகே போட்டியிடுகிறேன்: பாக்யராஜ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக போட்டியிடும்  பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு நேற்று சுவாமி சங்கரதாஸ் அணி என பெயரிடப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதியின் முதல் மலையாள பட டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி என்ற படத்திலும்  மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

சித்தார்த் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி!

நடிகர் சித்தார்த், ஜிவி பிரகாஷுடன் நடித்து வரும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

சாய்தன்ஷிகாவின் ஸ்டண்ட் பயிற்சி வீடியோ!

ஹீரோவுடன் மரத்தை சுற்றி டூயட் மட்டும் பாடிக்கொண்டிருந்த ஹீரோயின்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் ஹீரோயின்கள் ரிஸ்கான காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கைவிடப்பட்டாரா? காத்திருக்க வைக்கப்பட்டாரா? ரோஜாவின் நிலைதான் என்ன?

ஆந்திர மாநில தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவை நேற்று பதவியேற்றது.