திரைப்படமாகும் இந்தியாவின் தலைசிறந்த பெண்ணின் வாழ்க்கை!

  • IndiaGlitz, [Tuesday,December 01 2020]

ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகளாய் பிறந்து, லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிய இந்தியாவின் தலைசிறந்த பெண் என்ற புகழ் பெற்ற உமா பிரேமனின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

ஏறக்குறைய இரண்டு லட்சம் டயாலிசிஸ்கள், இருபதாயிரத்திற்கும் மேலான இதய அறுவை சிகிச்சைகள், நூற்றுக்கணக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள், மலைவாழ் மக்களுக்கு பள்ளிக்கூடங்கள், நாட்டிலேயே குறைந்த விலையில் வீடுகள் என பல எளிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் உமா பிரேமன்.

இந்திய குடியரசு தலைவர் தன் மாளிகையில் விருதும், விருந்தும் கொடுத்து கெளரவித்த பெண்மணிகளில் இவரும் ஒருவர். இப்படி பல சாதனைகளை செய்த இவரின் அசாதாரணமான வாழ்க்கையே தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பயோபிக் திரைப்படமாகிறது.

இப்படத்தை டிராபிஃக் ராமசாமி படத்தை இயக்கிய விக்னேஸ்வரன் விஜயன் இயக்குகிறார். இந்த படம் குறித்து அவர் கூறிய்போது, ‘சகமனிதனை நேசிப்பதை விட ஆகசிறந்த தத்துவமோ, செயலோ எதுவுமில்லை என எண்ணுகிறேன். சுற்றியுள்ளவர்கள் தன்னை வேதனைக்குள்ளாக்கினாலும் அவர்களுக்கு அதீத அன்பையே பரிசளித்திருக்கிறார் உமா பிரேமன் அவர்கள். இப்படம் பல பேருக்கு உத்வேகமளிக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

More News

சந்தானம் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: வைரலாகும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏ1'. இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று சந்தானத்திற்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு உள்ள ஹோல்டியா நிறுவனத்தின் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

கேப்டன்ஷிப் டாஸ்க்: பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் குறும்படம்

நேற்று நடைபெற்ற கேப்டன்ஷிப் டாஸ்க்கில் பாலாஜி, ரமேஷ் மற்றும் ரம்யா கலந்து கொண்ட நிலையில் இந்த டாஸ்க்கின் முடிவில் பாலாஜிக்கு ஏற்பட்ட அதிருப்தியை கேப்டன்

வீட்டுக்கு போகணுமா? வின் பண்ணனுமா? அர்ச்சனாவுக்கு வேற லெவல் கேள்வி கேட்ட ஆஜித்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியாக இருக்கும் போட்டியாளர் என்று ஆஜித்தை பலர் விமர்சனம் செய்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மிகச்சரியாக, சரியான அளவுடன் சொல்ல வேண்டிய

ரஜினிக்கு அரசியலை விட இதுதான் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் என்றும், அந்த சந்திப்பின்போது அரசியலுக்கு வருவது குறித்து