close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சீமராஜா' திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கனா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அனேகமாக இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அல்லது பட ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், இளையராஜா கலையில் ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.