சூர்யா-ஹரி படம் குறித்த முக்கிய அப்டேட்!

  • IndiaGlitz, [Wednesday,February 26 2020]

சூர்யா தற்போது ’சூரரைப்போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் விரைவில் அவர் ஹரி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. இந்த படத்தின் கதை விவாதம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாகவும் கதையில் சூர்யா சில திருத்தங்கள் கூறியதாகவும் இதனை அடுத்து இறுதி கதை தற்போது தயாராகி விட்டதாகவும் வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

முன்னதாக இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும் ஆனால் தற்போது அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டு, ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

சூர்யா-ஹரி படத்தின் கதை தற்போது தயாராகி விட்டதை அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஹரி படத்தில் நடித்து முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் சூர்யா படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய்-சுதா கொங்காரா சந்திப்பு: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்குவார் என ஏற்கனவே அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் டி இமான்.

நீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த், சரத்குமார், உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

டிரம்புக்கு அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில் இந்த இரண்டு நாட்களில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஹிட் அடித்த ட்ரம்பின் பாலிவுட் மஸ்தானி

உலகம் முழுவதும் ட்ரம்ப்பின் புகைப்படங்களை நெட்டிசன்கள் டிசைன் டிசைனாக  கலாய்த்து வருவது வழக்கம்.