11 மொழிகளில் வெளியாகும் 'தி காஷ்மிர் ஃபைல்ஸ்' இயக்குனரின் அடுத்த படம். மீண்டும் உண்மைக்கதை?

‘தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் தமிழ் உள்பட 11 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷ் தயாரிப்பில் உருவான ‘தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ சென்ற திரைப்படம் ரூ.25 கோடி பட்ஜெட்டில் தயாராகி உலகம் முழுவதும் 340 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இஸ்லாமியர் இடையே நடந்த பிரச்சனை குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது என்பதும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. ‘தி வேசின் வார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் கொரோனா வைரஸ் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பது குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம்,மலையாளம், மராத்தி உள்பட 11 மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

ரிலீசுக்கு முந்தைய நாளில் வெளியான 'யசோதா' படத்தின் வீடியோ: செம த்ரில்லிங் போல...

 நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் த்ரில்லிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த 'வாத்தி' பாடல் ரிலீஸ்: ரசிகர்கள் குஷி!

 தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டன என்பது தெரிந்ததே. 

ஐஸ்வர்யா ராஜேஷின் 'பிளாக் அண்ட் பிளாக்': வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் 'பிளாக் அண்ட் பிளாக்' உடையில் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

ரிலீஸில் மட்டுமல்ல, புரமோஷனிலும் மோதும் 'துணிவு - வாரிசு'?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் 'ஜில்லா' 'வீரம்' படங்களை அடுத்து இரு பிரபலங்களின் படங்களும் ஒரே

நீங்க முதல்ல ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க.. பிக்பாஸையே மிரட்டிய தனலட்சுமி

பிக்பாஸ் போட்டியாளர்கள் இதுவரை சக போட்டியாளர்களை மிரட்டுவதை மட்டுமே பார்த்து இருக்கிறோம். ஆனால் முதல் முறையாக பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸையே மிரட்டி உள்ள சம்பவம்