விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்:  'தி லெஜண்ட்' அண்ணாச்சி தகவல்

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் நடிப்பில் உருவான ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

மேலும் ‘தி லெஜண்ட்’ படத்திற்கு குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் - இந்தியா மொழி திரைப்படமாக வெளியான ‘தி லெஜண்ட்’ வெற்றியை அடுத்து இன்று சென்னையில் தமிழ் ஊடகங்கள் உடனான சந்திப்பு நடந்தது.

அருள் சரவணன் இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியதாவது: ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ஆடியோ விழா தற்போது சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்த உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி. மீடியாவின் சப்போர்ட் எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், கூறியிருப்பதாவது: ‘ஊடக நண்பர்களுக்கு வணக்கம்… உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி!!! விரைவில் சந்திக்கிறேன்…சந்திக்கிறோம்… என்று பதிவு செய்துள்ளார்.

More News

பாலிவுட்டில் அறிமுகமாகி தமிழுக்கு வரும் கேரள இளம் நடிகர்!

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ்  படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திரையுலகில் 30 ஆண்டுகள்: அஜித் ரசிகர்களே எதிர்பார்க்காத வைரல் வீடியோ!

நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களே எதிர்பாராத ஒரு வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

மசூதி முன்போ, சர்ச் முன்போ பெரியார் சிலை இருக்கா? தமிழ் நடிகையின் கேள்வியால் பரபரப்பு!

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்: இதுதான் காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இசை வெளியிட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பே இல்லை: 'விருமன்' படத்தில் பணிபுரிந்த பிரபலம் வருத்தம்!

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு